கொழும்பில் 4 மணிநேர நீர் வெட்டு...
இன்று கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி , இன்று காலை 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதற்கமைய கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
0 Comments: