Headlines
Loading...
குடும்ப ஆட்சி முடிவுகட்டுவோம் இந்த அரசின் கீழ் எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டோம்.

குடும்ப ஆட்சி முடிவுகட்டுவோம் இந்த அரசின் கீழ் எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டோம்.



இந்த அரசின் கீழ் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



இலங்கையில் இனி குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. குடும்ப ஆட்சி என்பது இம்முறையுடன் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இரட்டைக் குடியுரிமை கொண்ட பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அதனை நம்பினோம். ஆனால், அந்த உறுதிமொழி மீறப்பட்டது.

பஸில் ராஜபக்ச என்பவர் சூழ்ச்சிக்காரர். நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுபவர்.காமினி திஸாநாயக்க காலத்தில் மஹிந்தவுக்கு எதிராகத் தங்காலையில் போட்டியிட்டவர் அவர்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரியவர். அதற்கு மஹிந்த ராஜபக்ச உடன்படவில்லை. அமைச்சுப் பதவி என்பது தற்காலிகமானது, அது பறிக்கப்பட்டதையிட்டு நான் கவலை அடையவில்லை.

இலங்கையில் இனி குடும்ப அரசியலுக்கு இடமளிக்கப்படமாட்டாது. குடும்ப ஆட்சி என்பது இத்துடன் நிறைவுக்கு வரும்" - என தெரிவித்துள்ளார்.

0 Comments: