Headlines
Loading...
நாட்டை கட்டியெப்ப அனைவரும் பேதங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் - ருவன் விஜேவர்தன

நாட்டை கட்டியெப்ப அனைவரும் பேதங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் - ருவன் விஜேவர்தன



(எம்.எம்.சில்வெஸ்டர்)


நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாடென்ற ரீதியில் நாம் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை ஒரு புறம் தள்ளி வைத்து நாம் சகலரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன வலியுறுத்தினார்.


ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பு ஹைட் பார்க் திடலில் ஏற்பாடு செய்யபட்டிருந்த சத்தியாகிரகப் போராட்டம் குறித்து கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் தொடர்ந்தும் கூறுகையில், "ஐக்கிய தேசிய கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சத்தியாகிரக் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவதற்கு முன்னெடுத்துள்ளோம்.


இந்த சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலம் நாம் எதிர்பார்ப்பது என்னவெனில், ஆர்ப்பாட்டம் செய்வதற்கல்ல அரசாங்கத்திற்கு ‍ ஓர் சிறந்த செய்தியை வழங்குவதாகும். விசேட விதமாக நாடு என்ற வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.


இது, ஆட்சி அதிகாரத்திற்கான போரட்டமல்ல. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைதி வழி போராட்டமாகும். நாடு முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறிப்பட வேண்டும். இது எம்முடையதும் நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.


ஒவ்வொரு நாளும் மக்கள் தமது அத்தியவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக இரவு, பகல் என பாராது நீண்ட நேரம் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்கள், சமையல் எரிவாயுவுக்கான வரிசை, எரிபொருளுக்கான வரிசை என ஒவ்வொரு வரிசைகளிலும் நிற்கின்றனர்.


உண்மையிலேயே, நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் நாடென்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும். ஜாதி, மத, இன, மொழி பேதங்களை ஒரு புறம் தள்ளி வைத்து நாம் சகலரும் ஒன்றிணைய வேண்டும்.


இவ்வாறு கஷ்டங்களை அனுபவித்தும் பொதுமக்கள், நாட்டை முன்னேற்றி செல்வதற்கு தேர்தலின் போதாவது, நாட்டுக்கு அவசியமானவர்களை தெரிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.


ஆகவே, மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே எமது பொறுப்பாகும். இதற்காகவே இந்த வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.


சர்வ கட்சி மாநாட்டின்போது எமது கட்சித் தலைவர் ‍ முன்மொழிந்திருந்த ‍ யோசனைகளை இந்த அரசாங்கம் கவனத்திற்கொள்ளும் என நான் நினைக்கிறேன்" என்றார்.

0 Comments: