Headlines
Loading...
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு விளங்கியவர்கள்தான் ஆட்சியில் உள்ளார்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு விளங்கியவர்கள்தான் ஆட்சியில் உள்ளார்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ



(இராஜதுரை ஹஷான்)


மக்களுக்கான தேவைகளை ஒரு மணித்தியாலத்திலும், ஒரு நாளிலும் அல்லது வருடத்திலும் முழுமைப்படுத்த முடியாது. கொவிட் பெருந்தொற்று பரவல், பொருளாதார பாதிப்பு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டு மக்களது அடிப்படை தேவைகள் கட்டம் கட்டமாக முழுமைப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


கொலன்னாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி பணி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளதை எம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும், நிவாரணம் வழங்கல் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


கிராமபுறங்கள் அபிவிருத்திடைய வேண்டுமாயின் வீதி, நீர் மற்றும் மின்சார விநியோகம் ஆகிய துறைகள் அபிவிருத்தியடைய வேண்டும். கிராமப்புற அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


ஒரே தடவையாக முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியாது, கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். நல்லாட்சி காலத்தில் நாட்டின் அபிவிருத்தி பணிகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டன.


ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டின் அபிவிருத்தி குறித்து முன்னேற்றகரமான தீர்மானங்களை செயற்படுத்தியுள்ளார்.


அபிவிருத்தியுடன் மதம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்தும் உரிய செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு விளங்கியவர்கள்தான் ஆட்சியில் உள்ளார்கள்.


மக்களுக்கான தேவைகளை ஒரு மணித்தியாலத்திலும், ஒரு நாளிலும்,ஒரு மாதத்திலும் ஒரு வருடத்திலும் முழுமைப்படுத்த முடியாது. நாட்டு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

0 Comments: