இலங்கையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு
லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் இன்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோ கிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாக அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோவின் விலை 1,856 ரூபாயில் இருந்து 2,840 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1,359 ரூபாய் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 5 கிலோ சிலிண்டரின் விலையை 544 ரூபாயால் அதிகரித்து புதிய விலை 1680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் 2 கிலோ சிலிண்டர் 672 ரூபாயாகவும் விற்பனை செய்ய லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து அந்நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments: