பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரை


பொது போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய விடயங்கள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.


இதன்படி, பொது போக்குவரத்து, எம்புலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக சேவைகள், அத்தியாவசிய சேவை போக்குவரத்து, சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து ஆகியவற்றை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.