சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு ?

 


சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (26) முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.


இதன்படி ,கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.


செலவு அதிகரிப்பு காரணமாகவும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் அந்நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


அதற்கமைய , சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.


மேலும் எரிவாயு இறக்குமதி மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பிலான அறிக்கைகள் ஆராயப்பட்டு இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.