பிரதி சபாநாயகர் பதவி விலகல்


பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாளை பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் முதல் நாளில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது, புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும் நிலையில், வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுமென பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்ததையடுத்து தமது இராஜினமா கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார்.

 

அவரது இராஜினமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்ததுடன், தொடர்ந்து பதவி வகிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

Tags