ஹக்கீமின் இரட்டை வேடம்; ஹாபிஸ் நசீர் அவசரக் கடிதம்


2020 ஆகஸ்ட் 05 ம் திகதி நடைபெற்ற 

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின் 2020  ஒக்டோபர் மாதமளவில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) யின் வேட்புமனுவினூடாக தற்போதைய பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான என்னை, தற்போது அதிகாரத்தில் உள்ள 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சமகி ஜன பலவேகய (SJB) வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தீர்மானமே காரணமாகும்.


அவ்வாறிருக்கையில் முறையான விசாரணைகள் எதுவுமின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து என்னை திடீரென நீக்கிவிட்டதாகக் கூறி அவர் எவ்வாறு இந்த நாட்டைத் தவறாக வழிநடத்த முடியும்?


மேலும், தற்போது நமது அயல் நாடொன்றில் இலங்கையின் தூதுவராக இருக்கும் அவரது நண்பருடன் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதோ

அல்லது சமகி ஜன பலவேகயவின் அனுமதி இன்றியும் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியுடன் உறுதியான புரிந்துணர்வுக்கும் ரவூப் ஹக்கீம் வந்ததை அவரால் மறுக்க முடியுமா?


அதனை தொடர்ந்து, 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதி ரவூப் ஹக்கீம் அவர்களின் கார்னிவல் சொந்த (Carnival) அலுவலகத்தில் ஜனாதிபதியின் சகோதரர் திரு. பசில் ராஜபக்ச அவர்களுடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் சந்திப்பு நடத்தியதை அவர் மறுக்க முடியுமா?  குறித்த சந்திப்பில் ரவூப் ஹக்கீம் அவர்களின்  அழைப்பின் பேரில் நான் உட்பட எம்.சி.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், தெளபீக் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் எங்கள் அனைவரையும்  20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் எங்களை வேண்டிக் கொண்டதோடு, நான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற  விரும்பினாலும் சமகி ஜன பல வேகயவின் தலைமைத்துவம்  மற்றும் அவரது கண்டி மாவட்ட தேர்தலில் சமகி ஜன பலவேகயவின்  போட்டியிடுவதற்கான வாய்ப்பு என்பன காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.


நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவை, அத்தேர்தலில்  அமோக வெற்றியுடன் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருப்பதாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எனது வாக்காளர்களின் நலன் கருதியும், அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்துடன் இணைந்து வாக்காளர்களுக்கு அத்தியாவசியமான தேவைகளை பெற்றுக்கொடுக்க நான் அரசாங்கத்துடன் இணைந்து  செயற்படுவது அவசியமானதாலும் அரசாங்கத்துடன் இணைந்து  செயற்படுவதனை உடன்படுகிறேன்.


அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட எமது அரசியல் கட்சியின் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை நம்பி 20வது திருத்தத்திற்கு வாக்களித்தேன். ஆனால் சமகி ஜன பலவேகயவின் அழுத்தத்தின் காரணமாக ரவூப் ஹக்கீம் வாக்களித்தமைக்காக  எனது விளக்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.


ஆனால் ரவூப் ஹக்கீம் தான், நான்  பொது ஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கட்டாயாப்படுத்தியதற்கு ஏற்ப நான் செயற்பட்டதனை ரவூப் ஹக்கீம் நன்றாக  அறிந்திருந்ததால் இவ்விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீம் என்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.


கடந்த ஆண்டு நவம்பர் 3, 2020 அன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக என்னை SLMC யில் இருந்து நீக்கிவிட்டதாக இப்போது திடீரென்று  ரவூப் ஹக்கீம் கூறுகிறார், குறித்த நீக்கமும் கூட ஜனாதிபதி என்னை நாட்டின் அவசர தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை பெற்றுக் கொண்டதன் பின்னரே இக்குறித்த நீக்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு அழைத்ததன் பின்னர்   தேசிய நலன் கருதி அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.


எந்த விசாரணையும் இன்றி என்னை உடனடியாக கட்சியினை விட்டும் நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை எனக்கு வரவில்லை, அவ்வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதிலளிப்பேன்.


It is the Samagi Jana Balavegaya (SJB) Kandy district MP Rauff Hakeem who got me, the only MP elected to the present Parliament on the Sri Lanka Muslim Congress (SLMC) ticket to work with the present party in power the Sri Lanka Podujana Peramuna (SLPP) in October 2020, within two months of the SLPP winning the 5th August 2020 general elections. How can he mislead the country by claiming that I have been suddenly expelled from the SLMC without any duly constituted inquiry?


Can he deny that, he together with his friend who is presently Sri Lanka’s Ambassador in a neighbouring country negotiated with His Excellency The president Gotabaya Rajapaksa without the approval of the SLMC or SJB and came to certain understanding with the SLPP elected President?


Can he deny that in consequence thereof President’s brother Mr Basil Rajapaksa had an hour long meeting at Rauff Hakeem’s Carnival office on 18th October 2020 at which at Hakeem’s request I and HMM Harees, Faizal Cassim and Thowfeek MP’s attended and wanted us to vote for the 20th Amendment and work with the SLPP, though he cannot do so because of the SJB leadership and his Kandy district SJB slot? 


I agreed because the people had sent the SLPP to Parliament with a resounding victory and it was essential in the interests of my voters in the provincial district of Batticaloa that I work with the government in power to get essential relief to the electorate. I accordingly voted for the 20th Amendment trusting the elected political leadership. Under pressure from the SJB he called for my explanation  but did not pursue further action as he knew that he Hakeem is the one who wanted me to work with the SLPP. 


Now suddenly he claims to have sacked me from the SLMC for voting in favour of the Budget in Parliament last year on 3rd November 2020, that too, after the President invited me to join the Cabinet and to assist him in resolving urgent national problems, which I have accepted in the national interest. 


I have so far not received any communication on the alleged expulsion without any inquiry and will respond appropriately if and when received.