Headlines
Loading...
 பேருவளை மக்களுக்கு குப்பை மூலம் உயிர் ஆபத்து ! இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றில் உரை

பேருவளை மக்களுக்கு குப்பை மூலம் உயிர் ஆபத்து ! இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றில் உரை


பேரு­வளை குப்பை மேடு உரு­வாக்­கப்­பட்ட பகுதி ஆபத்­தான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் மீண்­டு­மொரு மீதொட்­ட­முல்ல சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் கழி­வு­களை அகற்­று­வது தொடர்பில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக கவனம் செலுத்தி தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்­டுக்­கொண்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற பிர­த­ம­ரி­ட­மான கேள்வி நேரத்­தின்­போதே அவர் இவ்­வாறு கோரிக்கை விடுத்தார்.

இது­தொ­டர்பில் அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், பேரு­வளை நக­ர­சபை பகு­தியில் சேக­ரிக்­கப்­படும் கழி­வு­களை அகற்­று­வது தொடர்பில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக கவனம் செலுத்தி தீர்வை பெற்­றுத்­தர பிர­தமர் விரை­வாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்­வி­டயம் தொடர்­பாக பிர­த­மரின் கவ­னத்­திற்கு நான் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் வைத்து கடி­த­மொன்றை வழங்­கி­யதை அவர் நினைவில் வைத்­தி­ருப்பார் என நான் நம்­பு­கிறேன்.

அந்த கடி­தத்தில், பேரு­வளை நக­ர­ ச­பைக்­குட்­பட்ட பகு­தியில் சேக­ரிக்­கப்­படும் கழி­வுகள் பல வருட கால­மாக பேரு­வளை, மரு­தானை, வத்­தி­மி­ரா­ஜ­புர கிரா­மத்தில் உள்ள காணியில் கொட்­டப்­பட்டு வரு­கி­றது. இதனால், அப்­ப­கு­தியில் வாழு­கின்ற 400க்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் சுகா­தார மற்றும் சுற்­றுச்­சூழல் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­துடன், இக்­கி­ரா­மத்தை அண்­மித்­துள்ள மொர­கல்ல சுற்­றுலாப் பகு­தியும் துர்­நாற்றம் மற்றும் ஈக்கள் பெருக்­கத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

கட­லுக்கு செல்லும் கால்வாய் அடை­பட்­டுள்­ள­தோடு இதனால், சிறிய மழை பெய்­தாலும், இந்த வீடுகள் அனைத்தும் வெள்­ளத்தில் மூழ்கும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளது. கடும் துர்­நாற்றம் வீசு­வதால், வீடு­களில் வசிக்க முடி­யாத நிலையும் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது.

ஈக்கள் பெரும் எண்­ணிக்­கையில் பெரு­கு­வதால் வீடு­களில் உணவு சமைத்து சாப்­பிட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவி வரு­கின்­றன. கொசுக்கள் பெருகி டெங்கு பரவும் அபாயம் அதி­க­மாக உள்­ளது. தோல் நோய்கள் பொது­வாக காணப்­ப­டு­கின்­றன. மற்றும் இந்த கிரா­மத்தில் வசிப்­பது நுரை­யீரல் நோய்கள் உட்­பட பல நோய்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன என தெரி­வித்­தி­ருந்தேன்.

ஏப்ரல் மாதம் முழு நாட்­டிலும் சிங்­கள, தமிழ் புத்­தாண்டு மற்றும் ரமழான் பெருநாள் கொண்­டா­டப்­பட்­டது. ஆனாலும், சுதந்­தி­ர­மாக புத்­தாண்டை கொண்­டா­டவோ, பெரு­நாளைக் கொண்­டா­டவோ ஏற்ற சூழல் இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. இந்த பகு­தியில் வசிக்கும் பெரும்­பா­லான மக்கள் மிகவும் ஏழ்­மை­யான, குறைந்த வரு­மானம் கொண்­ட­வர்கள். இதன் கார­ண­மா­கவே, இந்த மக்­களின் வலிகள் பற்றி எழுப்­பப்­படும் குரல்­களை பொறுப்­புள்ள தரப்­பினர் உண­ர­வில்லை என்றே தெரி­கி­றது.

பேரு­வளை மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தியில் இந்த கழி­வுகள் அகற்­றப்­படும் விதத்­தினால் இன்று பாரிய குப்பை மேடு உரு­வா­கி­யுள்­ளது. மீதொட்­ட­முல்லை குப்பை மேட்டில் நடந்­ததைப் போன்று பாரிய உயிர்ச் சேதங்­க­ளுக்குப் பின்னர் பொறுப்­பா­ன­வர்­களின் கண்கள் திறக்கப் போகின்­ற­னவா என்ற கேள்­வியை வருத்­தத்­துடன் கேட்க வேண்­டி­யுள்­ளது.

இந்த விவ­கா­ரத்தில் பிர­த­மரை நேர­டி­யாக குற்றம் சாட்­டு­ம­ள­வுக்கு நான் நியா­ய­மற்­ற­வ­னாக நடந்து கொள்ள மாட்டேன். சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளுக்குப் பொறுப்­பான அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் இது தொடர்பில் பொறுப்­புள்­ளது. குறிப்­பாக, உள்­ளூ­ராட்சி மன்றம், சுகா­தாரத் திணைக்­களம், சுற்­றா­ட­லுக்குப் பொறுப்­பான தரப்­பினர் என அனை­வ­ருக்கும் இது தொடர்பில் பொறுப்பு உள்­ளது.

பேரு­வளை, களுத்­துறை ஆகிய பிர­தேச செய­ல­கங்­களில் சுகா­தாரத் துறைக்­கான பொறுப்பு மாகாண சபைக்கு அன்றி, நேர­டி­யாக மத்­திய அர­சி­டமே உள்­ளது என்­பதை நான் குறிப்­பாகக் கூற வேண்டும். களுத்து­றை தேசிய சுகா­தார அறி­வியல் நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. நாடு முழு­வ­திலும் உள்ள பொது சுகா­தார அதி­கா­ரி­களின் அனைத்து பயிற்­சி­களும் இந்­நி­று­வ­னத்­தா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இக் கண்­ணோட்­டத்தில் பார்க்கும் போது இந்தப் பிர­தேசம் முன்­மா­திரிப் பிர­தே­ச­மாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த குப்பைமேடு உரு­வாக்­கப்­பட்ட பகுதி இன்று ஆபத்­தான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் சுகா­தாரம், சுற்­றுச்­சூழல் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றம் உட்­பட அனைத்து தரப்­பி­ன­ரையும் விரைவில் அழைத்து, கலந்­து­ரை­யாடி, இந்த குப்பை மேட்டை அகற்­று­வ­தற்கும், கழி­வு­களை அகற்­று­வ­தற்கு நிலை­யான தீர்வை வழங்­கு­வ­தற்கும், எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­களை விரை­வு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்குமாறும் பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.







0 Comments: