யாரை ஆதரிப்பது? மக்கள் காங்கிரஸின் சிக்கல் நிலைமை ?


(.எச் சித்தீக் காரியப்பர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் ரணில்- சஜித் இருதரப்பும் தொடர்ச்சியாகப் பேசுகின்றனர்.

எனவே யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை உடனடியாக மேற்கொள்ள முடியாதுள்ளது.

இதன் காரணமாக அடுத்த மாதமான ஆகஸ்ட்  முதல் வாரத்தில் எமது கட்சியின் அரசியல் உயர்பீடம் கூடியே இது தொடர்பில் தீர்மானிக்கும். இவ்வாறு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று (30) என்னிடம் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற அவரது கட்சி மாநாட்டில் இவ்வாறு தெரிவித்திருந்தார்,

"இன்றும் எம்மை பல கட்சிகள் அழைக்கின்றன. ஆனால், நாங்கள் வெறுமனே வாய் வார்த்தைகளுக்கு சோரம் போய் சமூகத்தை விற்றுவிடப் போவதில்லை என்று கூறிய கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் யாருக்கு எமது ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மக்களின் பதிலும் வந்தது பொறுமை கொள்ளுங்கள் உங்களது கருத்துக்கள் உள்வாங்கப்படும்" என்றார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்