பம்பலப்பிட்டியில் 10 கோடி ரூபாபெறுமதியான சொகுசு வீடு ஒன்று கலபொட அத்தே ஞானசார தேரரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று (12 ) தெரிய வந்துள்ளது .
சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக வழக்குத் தொடரப்படும் என்றும் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கும் கொழும்பு மேலதிக நீதிவான் ரத் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி மற்றும் ஏகல ஆகிய இடங்களைச் சேர்ந்த இனோகா சந்திம சேனாநாயக்க என்பவர் முதன்மை நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கிலேயே மேலதிக நீதிவான் இந்தஉத்தரவை பிறப்பித்தார.
ராஜகிரிய , நாவல வீதி , ஸ்ரீ சதர்ம ராஜித விஹாரையைச் சேர்ந்த கலபொடஅத்தே ஞானசார தேரர், அவரது சீடர் எனக் கூறப்படும் தயாசிஹ தேரர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
0 Comments: