HOT NEWS
வாகனங்களில் அரசியல் பிரச்சார விளம்பரங்கள் ; பொலிஸ் எச்சரிக்கை
அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது. விளம்பரங்களுடன் காணப்படும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும்.
ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை அகற்றும் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படலாம். பொலிஸாரின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமாயின், தானாக முன்வந்து இந்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
0 Comments: