பாடசாலை மாணவர்களின் மதிய உணவு தொடர்பில் வெளியான செய்தி பொய்யென கல்வி அமைச்சு தெரிவிப்பு

Ceylon Muslim
0 minute read
0

பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த தகவல் அனைத்தும் பொய்யானது என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

To Top