அதாவுல்லா- மு.கா இணைவு செய்தியை நிகாரித்த ஹக்கீம், அதாவுல்லாஹ் தரப்பு!

Ceylon M
0

(சிலோன் முஸ்லிம்) தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து, எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாக வெளியான வீரகேசரி செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என அதாவுல்லாஹ் தரப்பு நிராகரித்துள்ளதுடன், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பரும் நிராகரித்துள்ளார்


இது தொடர்பில் நிசாம் காரியப்பர் கருத்து தெரிவிக்கையில்; 


“ அதாவுல்லாஹ்வை நாம் சந்தித்து பேச்சி நடத்தினோம், ஆனால் அட்டாளைச்சேனை சபையை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவையே கோரினோம், அத்துடன் மாகாண சபை தொடர்பாக  பேசப்படவில்லை” என ஊடகமொன்றுக்கு நிசாம் காரியப்பர் கருத்து தெரிவித்தார், 


இது தொடர்பில், அதாவுல்லாஹ்விடம் வினவிய அரசியல் விமர்சகர் கல்முனை இப்றாஹிம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்; 


“அதாவுல்லாவுக்கு கோலுக்கு மேல் கோல் எடுத்து அல்லாவுக்காக சந்திப்போம் வாருங்கள் என்று கெஞ்சியவர்கள் யார்..?


ஒரு ஹோட்டிலில் அதாவுல்லா வரும்வரை இரண்டரை மணித்தியாளங்கள் காத்துகிடந்தார் ஹக்கீம்.... அங்கே பேசப்பட்டவிடயம் அட்டாளச்சேனையில் ஆட்சியமைப்பது எவ்வாறு என்பதுபற்றித்தான்....அதனை ஒருசில நிமிடங்களில் பேசிவிட்டு அதாவுல்லா வெளியேறிவிட்டார்....அங்கே இருந்த ஹிஸ்புல்லாதான் கதையை போட்டுள்ளார் அதாவுல்லா சேரும் நாமும் சேர்ந்து இயங்கவேண்டும் அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் சேர் என்று கேட்டுள்ளார்....அதற்கு அதாவுல்லா அதற்கு காலம் பதில்சொல்லும் என்ற வார்த்தையுடன் வெளியேறிவிட்டார் இதுவே நடந்தது....அங்கே மாகாணசபை முதலமைச்சர் விடயமும் பேசபடவில்லை ஒரு மண்ணாங்கட்டியும் பேசப்படவில்லை... இது சம்பந்தமாக அதாவுல்லா மேயர் பதவியேற்பு விழாவின்போது இந்த விடயங்களை தெளிவுபடுத்துவார் என்று நம்புவோமாக....


ஆனால் ஒன்று....கிழக்குமாகாண மக்களின் நண்மைகருதி எல்லாக்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பொதுச் கட்சி  சின்னத்தில்  ஒன்றுபடலாம் அதில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதே எங்களின் கருத்தாகும்.....புரிந்தால் சரிதான்...? முனைமருதவன்” என கருத்து தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top