புத்தளம் பாயிஸின் மகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் பதவி!

Ceylon M
0


 #ஶ்ரீ_லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபையின் கௌரவ உறுப்பினராகிறார் ஷதா பாயிஸ்…


மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் அன்புப் புதல்வி ஷதா பாயிஸ் அவர்கள் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக எமது கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


 மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் அவர்களையும் அன்னாரது குடும்பத்தையும்  கௌரவிக்கும் முகமாக இந்த பதவியை எமது கட்சி சார்பாக ஷதா பாயிஸுக்கு வழங்கி வைத்துள்ளோம்.


எனவே அதற்கான நியமனப் பத்திரம் இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும்,முன்னாள் நகர சபை உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. 


கே.ஏ.பாயிஸ் மரணித்து இன்றுடன் 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது அன்புப் புதல்வி ஷதா பாயிஸ் அவர்கள் ஒரு மாநகர சபையின் உறுப்பினராக இன்றிலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். www.ceylonmuslim.com

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default