கட்சி அரசியலிருந்து ஒதுங்கிய மூத்த அரசியல் தலைவர் இம்­தியாஸ் பாக்கீர் மார்க்கார்!

NEWS
1 minute read
0

கட்சி அர­சி­யலில் இருந்து முற்­றாக நீங்கிக் கொள்­வ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ள ஐக்­கிய மக்கள் சக்­தியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மார்க்கார், சமூக சார்ந்த பிரச்­சி­னை­களை தீர்க்க இன, மத, மொழி, கட்சி பேத­மின்றி எந்­த­வொரு தரப்­பி­ன­ருக்கும் பூரண ஒத்­து­ழைப்பை வழங்க தயா­ராக இருப்­ப­தாக உறு­தி­ய­ளித்தார்.

ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தில் பல்­வேறு விட­யப்­ப­ரப்­பு­களில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பார்க்கீர் மார்க்கார் ஆற்­றிய உரை­களை உள்­ள­டக்­கிய ” மனச்­சாட்சி” எனும் நூல் வெளி­யிட்டு நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள இலங்கை மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது விசேட உரை­யாற்­றிய போதே முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்த நிகழ்வில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, ஆளும் மற்றும் எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், ஒய்வு பெற்ற சட்ட மா அதி­பரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான பாலித பெர்­னாண்டோ, ஓய்­வு­பெற்ற ஜனா­தி­பதி செய­லாளர் ஒஸ்டின் பெர்­னாண்டோ மற்றும் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் முன்னாள் தலை­வரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான சாலிய பீரிஸ், மற்றும் ஆளும் மற்றும் எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய இம்­தியாஸ் பாக்கீர் மார்க்கார்,

நான் கட்சி அர­சி­யலில் இருந்து முற்­றாக நீங்கி கொள்­வ­தற்கு தீர்­மானம் எடுத்­துள்ளேன். எனது இந்த தீர்­மானம் வேறு ஒரு அர­சியல் கட்­சி­யுடன் இணை­வ­தற்கோ அலல்து புதிய அர­சியல் பய­ண­மொன்றை ஆரம்­பிப்­ப­தற்கோ அல்ல.

நான் சமூகம் சார்ந்த அர­சியல் நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்தும் ஈடு­படுவேன். சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க முன்னின்று செயற்படுவேன். இதற்காக இன, மத, மொழி, கட்சி பேதமின்றி எந்தவொரு தரப்பினருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என்றார். - (CeylonMuslim)
To Top