கட்டுகஸ்தோட்டை ரிஸ்லா ரபீக் இலங்கை நிருவாக சேவை அதிகாரியாகத் தெரிவு..!

NEWS
0

கண்டி உடுதெனியவைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்டுகஸ்தோட்டை பாத்திமா ரிஸ்லா ரபீக் இலங்கை அரசாங்க நிருவாக சேவை (SLAS) அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு முஸ்லிம் நிருவாக சேவை அதிகாரியும் இவரேயாவார்.

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பட்டதாரியான இவர் இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையிலும் அதன் நேர்முகப் பரீட்சையிலும் அதி கூடிய புள்ளிகளுடன் தெரிவாகியுள்ளார்.

தகவல்தொழில்நுட்பவியல், உளநலக் கல்வி ,ஆங்கில மொழிக் கல்வி என்பவற்றில் டிப்ளோமா பட்டங்களையும் பெற்ற ரிஸ்லா ரபீக் மும்மொழிகளில் ஆற்றல் கொண்டவர் ஆவார்

கண்டி பெண்கள் உயர்தரக் பாடசாலையின் மாணவியான இவர் கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் இணைப்பாளராகவும் விஞ்ஞான சங்கம் உட்பட பல்வேறு பாடசாலை சங்கங்களிலும் பங்களிப்பாற்றியுள்ளார்

இவர் உடுதெனிய அல்ஹாஜ் ரஷீத் எம் ரபீக் , வத்தேகெதர ரிஸானா ரபீக் தம்பதிகளின் புதல்வியும் கொழும்பு வெள்ளவத்தை எஸ் பிலாலின் துணைவியும் ஆவார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top