அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையில் சுயேட்சையாக களமிறங்கி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஷாரப், முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (25) சாய்ந்தமருது தனியார் மண்டபம் ஒன்றில் கட்சியின் தேசிய தலைமை ரவுப் ஹக்கீம் முன்னிலையில் இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும், பலர் முஷாரப்பின் இணைவின் மூலம் அதிருப்பிடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது, குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தின் மத்திய குழு அல்லது பொத்துவில் காட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவியவருகின்றது.
முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது அதிகமான விமர்சனங்களை முன்வைத்தது மாத்திரமின்றி றவூப் ஹக்கீமை தாறுமாறாக பேசி இருந்தமையும், கடந்த கோட்டாவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போது, இவர் துணை நின்றதுதுடன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போதும் அதிகமாக ராஜபக்ஷ தரப்புடன் இருந்து சுக போகங்களை அனுபவித்த முஷாரப்பை முஸ்லிம் சமூகம் அதிகம் விமர்சித்திருந்தமையும் இவரின் இணைவு மீதான புறக்கணிப்பாக பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம் சமூகத்தினரால் விமர்சிக்கப்பட்ட் முஷாரப் போன்றவர்களை மக்கள் நிராகரித்த போதும், முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பொத்துவில் சபையின் அதிகாரத்தை தான் கைப்பற்றி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். என்ற நற்பாசையில் அந்த ஊர் போராளிகளின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாமல் ரவூப் ஹக்கீம் எடுத்த இந்த செயற்பாட்டால் மத்திய குழு உள்ளிட்ட போராளிகள் அதிருப்தியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தை புறக்கணித்த ஐந்து பேரும் எதிர்வருகின்ற 27 ஆம் திகதி தவிசாளராக தெரிவு செய்யப்படவிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களை ஆதரிப்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.