யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி இன்று (31) வெளியிடப்பட்டது. குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு நன்றிகள் சகோதரி றிஸ்லாக்கு வாழ்த்துக்கள்.
வடக்கில் தமிழரசு கட்சிக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்ததை போன்று, வன்னியில் அதிகமாக தமிழ் மக்களை பட்டியலில் இணைத்த ரிஷாட் பதியுதீனுக்கும் அம்மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.