முஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லைதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்று  பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்த ஞான­சார தேரர்   தெரி­வித்தார்.

அர­சாங்கம் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பாடு­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த  பாடு­பட்டு வரு­கின்றார். இந்த நல்­லி­ணக்க முயற்­சிக்கு நாம் ஆத­ரவு தெரி­விக்­கின்றோம்  என்றும் தேரர் சுட்­டிக்­காட்­டினார்.  

மட்­டக்­க­ளப்­புக்கு  நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷ­வுடன்   விஜயம் செய்த  ஞான­சார தேரர்  மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையில் இடம் பெற்ற   கலந்­து­ரை­யா­டலின் பின்னர் ஊட­கங்­க­ளுக்­கு­க­ருத்து தெரி­விக்­கை­யி­லேயே    மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில் 

நாங்கள் இந்த நாட்டில் வாழும் தமி­ழர்­க­ளையோ அல்­லது முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நினைக்க வில்லை. இந்த நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும்.

கிழக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளன. கிழக்கு மாகா­ணத்தில் சிங்­கள மக்கள் எதிர் நோக்கும் பிரச்­சி­னைகள் அவர்­களின் கோரிக்­கைகள் தொடர்பில் நாம் நீதி­ய­மைச்­ச­ருக்கும் அர­சாங்­கத்­திற்கும் எடுத்துக் கூறி­யுள்ளோம்.

இந்த நாட்டில் அனைத்து மக்­க­ளுக்கும் பிரச்­சி­னைகள் உள்­ளன என்­பதை நாங்கள் அறிவோம். யுத்­தத்­திற்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வாழ்ந்த சிங்­கள குடும்­பங்கள் இன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மீள குடி­யே­று­வதில் பல் வேறு பிரச்­சி­னை­களை எதிர் நோக்கி வரு­கின்­றன . அவர்­க­ளுக்கு இன்று இங்கு வாக்­க­ளிக்­கவும் முடி­ய­வில்லை.

கிழக்கு மாகா­ணத்தில் சிங்­கள பௌத்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படல் வேண்டும். அவர்கள் யுத்­தத்­திற்கு முன்னர் வசித்த பகு­தி­களில் மீள குடி­யேற வசதி செய்­யப்­படல் வேண்டும்.

அர­சாங்கம் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பாடு­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த  பாடு­பட்டு வரு­கின்றார்.

இந்த நல்­லி­ணக்க முயற்­சிக்கு நாம் ஆத­ரவு தெரி­விக்­கின்றோம். நாட்டை மீட்­ப­தற்­காக யுத்தம் செய்த படை வீரர்­களின் தட­யங்கள் இங்கு அழிக்­கப்­பட்­டுள்­ளன. அவைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.

தொல் பொருள் ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு அவைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.

அது சிங்கள மக்களுக்காக மாத்திரமல்ல அனைத்து சமூகங்களின் நன்மைக்காகவும் அது பாதுகாக்கப்படல் வேண்டும் என்றார்.
முஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை முஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை Reviewed by NEWS on December 23, 2016 Rating: 5