முஸ்லிம் கூட்டமைப்பு ஒருபோதும் உருவாகப்போவதில்லை; அரசியல் விமர்சகர்கள்முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம்களின் நலன்கருதி உருவாக்கப்படும் என தோல்வியுற்ற ஒரு சில வாக்கு வங்கியற்ற அரசியல் பிரமுகர்கள் கூறிக்கொணடு வருகின்ற நிலையில் இக்கூட்டமைப்பு உருவாக மாட்டாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக்கூட்டில் முஸ்லிம்களின் பெரும்பான்மை அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் சேரப்போவதில்லை என திடம் கொண்டுள்ள நிலையில் ரிசாத் பதியுதீனும் இதில் இணைந்து கொள்ள மாட்டார். அதாஉல்லாவும் இதில் சேரப்போவதில்லை என சாடை மாடையாக குறிப்பிட்டார். அப்படியென்றால் யார் இதில் சேரப்போகிறார்கள் என்ற கேள்வியுள்ளது.

மீண்டும் அரசியலுக்கு நுழைய நினைக்கும் பழைய தோல்வியாளர்கள் சிலர் தங்களை கூட்டமைப்பினர் எனக்குறிப்பிட்டு வாக்கு கேட்பர் அதிலும் அவர்களுக்கு தோல்விதான் என்ற நிலை உருவாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...