மீண்டும் விலைபோனதா தேசியப்பட்டியல்; தேர்தல் வருகிறது கேட்டுப்பெறுங்கள்!


முஹம்மட்கான் 

அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் வேறு ஒரு பிரதேசத்திற்கு கைமாறவுதற்கான முஸ்தீபுகள் எட்டப்பட்டுள்ளதாக அறியக்கிடைப்பதான எமது கொழும்பு விவகார செய்தியாளர் முஹம்மட்கான் தெரிவித்தார்,

கிழக்குமாகாண சபை கலைந்துள்ள நிலையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், பொத்துவில் ஆகியவை அதிகாரமிழந்து காணப்படுகிறது, இந்த பகுதிகளில் எதிர்வரும் தேர்தலில் பாரிய சவாலை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொள்ள கூடும் ஆகவே அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் வழங்கினால் ஏனைய ஊர்களின் வாக்குவங்கியும் பாதுகாக்கப்படும், ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு முஸ்தீபுகளும் எட்டப்படவில்லை.

எமது கொழும்பு விவகார செய்தியாளர் குறிப்பிடுகையில், குறிப்பிடப்பட்ட ஒருவர் இதனை தாரைவார்க்க தயாராக உள்ளதாகவும் இதற்கான விலையும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இத எந்தவகையில் நடைமுறைச்சாத்தியம் என்பது தெளிவில்லை, ஆனால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதே சரியான தீர்வாக இருக்கும்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...