ஊழலுக்கு தண்டனை வழங்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்

NEWS
0 minute read

ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான தராதரங்களும் பாராமல் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (11) பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
யார் தவறு செய்தாலும் கட்சி, பதவி, அந்தஸ்து என்பவற்றைப் பொருட்படுத்தாது தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பின்நிற்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்
To Top