தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2018

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தவிசாளராக அம்ஜத் மௌலவி?


அஹமட் நுஸ்கி

அட்டாளைச்சேனை பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றினால் அம்ஜத் மௌலவி அவர்களை தவிசாளராக்க தலைமை எண்ணுவதாக அறியமுடிகிறது.

நேற்று இடம்பெற்ற பாலமுனை பொதுக்கூட்டத்தில் அதிகம் அம்ஜத் மௌலவியை தலைவர் ஹக்கீம் புகழ்பாடினார், அது மாத்திரமின்றி அவர் குடும்பத்திற்கு வாக்குறுதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் அட்டாளைச்சேனைக்கு எம்.பி பதவி கொடுத்திருக்கிறபடியால், பாலமுனைக்கு தவிசாளரும், ஒலுவிலிக்கு பிரதி தவிசாளரும், அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வேட்டபாளர் லொய்ட்ஸ்க்கு பிரதி தவிசாளரும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வாக்கு வங்கிகளை தனதாக்கிக் கொண்டுள்ள தமீம் ஆப்தீன், றியா மசூர், கித்ர் மாஸ்டர் ஆகியோரும் தவிசாளரை எதிர்பார்ப்பதாக அறியமுடிகிறது.

Post Top Ad

Your Ad Spot

Pages