இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!


இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் என இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தனித்தனி வழக்குகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்துக் கொண்டார் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அடிப்படையற்றது என்றும், தான் பிரதமராக தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.