குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நான் தயார்,சட்டம் ஒழுங்கு அமைச்சை தர நீங்கள் தயாரா?சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால் ஆறு மாதங்களுக்குள் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
(18.02.2018) அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கம் கடந்த காலத்தில் தவறியதனாலேயே மக்கள் தேர்தலில் இவ்வாறு பாடம் புகட்டியுள்ளனர்.  தனக்கு சம்பந்தப்பட்ட அமைச்சை வழங்கினால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்பர அமில தேரரும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு மிகவும் தகுதியானவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாதான் என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நான் தயார்,சட்டம் ஒழுங்கு அமைச்சை தர நீங்கள் தயாரா? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நான் தயார்,சட்டம் ஒழுங்கு அமைச்சை தர நீங்கள் தயாரா? Reviewed by NEWS on February 19, 2018 Rating: 5