ஜனாதிபதியுடன் பாகிஸ்தான், செல்வதை தவிர்த்தது ஏன்? முஜிபுர் ரஹ்மான் விளக்கம்
நாட்டில் நிலைமைகள் முழுமையாக சுமுக நிலைக்கு வராத காரணத்தினாலேயே நான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்துக்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்வதற்கு இன்று வியாழக்கிழமை அந்நாட்டுக்கு சென்றார். இந்த குழுவில் பல முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் இணைக்கப்பட்டிருந்தனர். பலர் பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி செல்லவில்லை. 

இந்நிலையில் இது குறித்து அவரிடம் வினவியபோது, நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ர்ந்தும் அச்சத்துடன் வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்சிலையில் நான் நாட்டில் இருக்கவேண்டியது கட்டாயமானது என கருதுகிறேன். எனவே பாகிஸ்தானுக்கு ஜனாதிபதியுடன் செல்வதை தவிர்ந்துகொண்டேன் என்றார். 
ஜனாதிபதியுடன் பாகிஸ்தான், செல்வதை தவிர்த்தது ஏன்? முஜிபுர் ரஹ்மான் விளக்கம் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான், செல்வதை தவிர்த்தது ஏன்?  முஜிபுர் ரஹ்மான் விளக்கம் Reviewed by NEWS on March 22, 2018 Rating: 5