திகன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது!


திகன அசம்பாவிதத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துளார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் நேற்று இரவு பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...