இலங்கையில் அனைத்து சமுதாய மக்களும் ரத்த பாசத்துடன் வாழ வழிகாண வேண்டும்டாக்டர்  அப்துல் கலாம் நண்பரின் இயக்கம் தேசிய ஜனநாயகக் கட்சியின் பொருளாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி வேண்டுகோள்

ஓரிருவர் செய்யும் தவறுகளுக்கு  ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பழிவாங்க நினைப்பது  அறிவீனம்..இலங்கையில் நடைபெற்ற வன்செயல்கள்,  உயிர் மற்றும் பொருள் இழப்புகள் நாகரீக சமூகத்தில் விழுந்த மிகப்பெரிய கரும்புள்ளி..இலங்கை அரசு  உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும்..பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்க  நிவாரணம் வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...இலங்கை  இணக்கமான பூமியாக உருவெடுக்க, அமைதி நிலவ இறைவனை வேண்டுகிறேன்..

இழப்புக்குள்ளான மக்களுக்கு  எந்த ஆறுதல் வார்த்தைகளும் பயன்தராது என்பதால் அவர்களுக்கு ஸப்ரன் ஜமீல் என்ற  அழகிய பொறுமையை வழங்க  இறைவனை யாசிக்கிறேன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...