பிரதமர் பதவி விலக வேண்டும் இல்­லையேல் தேசிய அர­சாங்­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும்!பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்த விவா­தத்­திற்கு முன்னர் பிர­த­மரே தனது பத­வி­யினை துறக்க வேண்டும். இல்­லையேல் நான்காம் திகதி இரவு 9 மணி­யுடன் தேசிய அர­சாங்­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தது. 

நல்­லாட்­சியை காப்­பாற்ற வேண்­டுமா அல்­லது தனது பத­வியை காப்­பாற்ற வேண்­டுமா என்­பதை  பிர­தமர் தீர்­மா­னிக்க வேண்டும், அதற்கு இரண்டு நாட்கள் காலக்­கெடு கொடுப்­ப­தா­கவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர்  தெரி­வித்­தனர். 
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இவ்­வாறு குறிப்­பிட்­டனர். 
  சிரேஷ்ட உறுப்­பினர், அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த கூறு­கையில். 
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யா­னது நியா­ய­மான அடிப்­படை நிலைப்­பா­டு­களை கொண்ட கார­ணி­களை உள்­ள­டக்­கியே  முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.  பாரா­ளு­மன்­றத்தின்  கட்சி நிலைப்­பா­டு­களை  அவ­தா­னித்தால், பொதுத் தேர்­தலின் போது ஐக்­கிய தேசிய முன்­னணி 106 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது. இதில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 82 ஆச­னங்கள் உள்­ளன.  ஏனை­யவை கூட்டுக் கட்­சி­களின் ஆச­னங்­க­ளாகும். 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 95 ஆச­னங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு 82 ஆச­னங்­களும் கூட்­டணி கட்­சி­க­ளுக்கு ஏனைய ஆச­னங்­களும் உள்­ளன. ஆகவே பார­ளு­மன்­றத்தில் தனிக் கட்சி அங்­கீ­காரம் என்று பார்க்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும், ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடையில் ஆசன எண்­ணிக்கை சம­மா­கவே  உள்­ளது. இதில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஆளும் தரப்­பிலும் எதிர்த்­த­ரப்­பிலும் இருந்து செயற்­பட்டு வரு­கின்­றது. இதனைத்  தவிர்த்து  தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்­சி­களும் அடுத்த இடங்­களில் உள்­ளன. இதனை கொண்டே நான்காம் திகதி வாக்­கெ­டுப்­பிலும் தீர்­மா­னங்கள் அமை­யப்­போ­கின்­றன. 
 ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்ட தீர்­மானம்  ஊடாக  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க முடி­யாது. இந்­நி­லையில்   ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தீர்­மானம் என்­ன­வென்­பது குறித்து கேள்வி எழு­கின்­றது. மத்­திய வங்கி ஊழல் விவ­காரம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கோரிக்­கை­களை உள்­ள­டக்­கிய வகை­யிலே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் 9 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு இந்தக் குழு 15 கார­ணி­களை முன்­வைத்­தது. 
அதற்­க­மை­யவே ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. இதனைக் கொண்டே இப்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வரையில் வந்­துள்­ளது.  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள கார­ணி­களில் 13 கார­ணிகள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சுட்­டிக்­காட்­டிய விட­ய­மாகும். ஆகவே  ஒரு­போதும்  எம்மால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்க்க முடி­யாது. 
நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் அர­சாங்கம் தோற்றால் ஜனா­தி­ப­தியும் இல்லை, பிர­த­மரும் இல்லை சபா­நா­ய­கரே பொறுப்­புக்­களை கையாள வேண்டும் என சிலர் கூறு­கின்­றனர். இவர்­களின் கருத்­துக்கள் எந்­த­வித அடிப்­ப­டையும் இல்­லா­த­வை­யாகும். அர­சியல் அமைப்பு என்­ன­வென்­பது தெரி­யாத நபர்­க­ளா­லேயே  இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைக்க முடியும். அர­சியல் அமைப்பின் 46 ஆம் அத்­தி­யாயம் இரண்டாம் சரத்தில் இந்த விட­யங்கள் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­திக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வர முடி­யாது. அமைச்­ச­ரவை பிர­தானி என்ற வகையில் அவரை நீக்­கி­விட்டு அர­சாங்­கத்தை எவ்­வாறு கொண்­டு­செல்ல முடியும்.? ஆகவே யதார்த்­த­மாக நடை­பெறும் காரி­யங்­களை மாத்­தி­ரமே நாம் பேச வேண்டும். 
மேலும் இப்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்த கட்­சி­களின் நிலை­மை­களை கருத்தில் கொண்டால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கு  44.6 வீத வாக்­குகள் கிடைக்­கப்­பெற்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 32.5 வீத வாக்­குகள், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு 9.8 வீத வாக்­கு­களும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு 3.6 வீத வாக்­குக்­க­ளு­மாக மொத்­த­மாக 14.2 வீத வாக்­கு­களும், ஜே.வி.பி க்கு 6 வீத வாக்­கு­களும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு 3 வீத வாக்­கு­களும் கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. 
இதில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் பிரே­ர­ணையை ஜே.வி.பி ஆத­ரிப்­ப­தாக கூறி­யுள்ள நிலையில் மொத்­த­மாக 51 வீத மக்கள் ஆத­ரவும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இணைந்தால் மொத்­த­மாக 65 வீத­மான  வாக்­குகள் பிர­த­மரை எதிர்க்கும் அணியில் உள்­ளன. ஆகவே இவற்­றை­யெல்லாம் கருத்தில் கொண்டு பிர­தமர் உட­ன­டி­யாக தீர்­மானம் எடுக்க வேண்டும் எனக் குறிப்­பிட்டார். 
செய்­தி­யாளர் சந்­திப்பில்  கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் டிலான் பெரேரா கூறு­கையில். 
நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஊட­கங்கள் முன்னாள் வந்து கருத்­துக்­களை முன்­வைக்­காது விடயம் குறித்து ஆராய்ந்து ஒரு தீர்­மானம் எடுக்­கவே நாம் முயற்­சித்து வந்­துள்ளோம். இதில் சட்ட நகர்­வு­க­ளுக்கு அப்பால் அர­சியல் ரீதி­யிலும் சரி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க  வேண்டும் என்­ப­துவே மக்­களின் ஒரே நோக்­க­மாக உள்­ளது. அதற்கு அமை­யயே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தீர்­மா­னங்­களை கொண்­டுள்­ளது. தேசிய அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்க நாம்  அனை­வரும் இணைந்­துள்ள நிலையில் தொடர்ந்தும் நல்­லாட்சி அர­சாங்கம் பய­ணிக்க வேண்டும். அவ்­வாறு பய­ணிக்க வேண்டும் என்றால் உட­ன­டி­யாக நாட்டு மக்கள் அறிய பிர­தமர் பதவி விலக வேண்டும். 
கடந்த கால ஆட்சி நகர்­வு­களை பார்க்­கையில், கோப் குழுவின் அறிக்­கை­யினை, சாட்­சி­யங்­களை மற்றும் மக்­களின் நிலை­பாட்­டினை பார்க்­கையில் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வரும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சாதா­ர­ண­மான ஒன்­றாகும். இதில் தவறு கூறும் அள­விற்கு எதுவும் இல்லை. ஆகவே நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எம்மால் எதிர்க்க முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலான் கூட இதனை எதிர்க்க முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் பலரும் மத்­திய வங்கி விட­யத்தில் நியா­ய­மான கருத்­துக்­களை முன்­வைத்­தனர். ஆகவே அவர்­களும் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆத­ரிக்க முடி­யாது. எனவே கூட்டு அர­சாங்கம் தொடர வேண்டும் என்றால் உட­ன­டி­யாக, நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வர முன்னர் பிர­தமர் பதவி விலக வேண்டும். இல்­லையேல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி  கூட்டு அர­சாங்­கத்தை நிரா­க­ரிக்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டிய நிமையை ஏற்­படும்  எனக் குறிப்­பிட்டார். 
செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன கூறு­கையில்,
மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி முன்­னெ­டுத்த தீர்­மா­னங்­களை, வெளி­ப­டுத்­திய தக­வல்­களை  உள்­ள­டக்­கிய வகை­யி­லேயே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் குழு­வினர் முன்­வைத்த 15 கார­ணி­களில் 13 கார­ணிகள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை இனி­யொ­ரு­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினால் நிரா­க­ரிக்க முடி­யாது. அவ்­வாறு நிரா­க­ரிக்கும் தீர்­மா­னமும் இல்லை. எனினும் ஒரே ஒரு மாற்­று­வ­ழியை நாம் கூறு­கின்றோம். நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வர இன்னும் காலம் உள்­ளது. அதற்கு முன்னர் இன்றோ நாளையோ பிர­தமர் நிலை­மை­களை விளங்­கிக்­கொண்டு பத­வியை துறப்பார் என்றால் தொடர்ந்தும் நல்­லி­ணக்க அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­படும். சகல தரப்­பி­னரும் ஒரே கார­ணியை முன்­வைக்கும் நிலையில் பிர­தமர் சரி­யான தீர்­மா­னத்தை முன்­னெ­டுக்க வேண்டும். பிர­தமர் மீது தனிப்­பட்ட கோபங்­களோ பழி­வாங்­கல்­களோ எதுவும் இல்லை. அவர் சிறந்த அர­சியல் வாதி, கற்ற மனிதர், எனினும் அவ­ரது தலை­மைத்­து­வத்தின் கீழான அர­சாங்கம் சரி­யான பாதையில் பய­ணிக்­க­வில்லை. ஆகவே அவ­ரது பத­வியை துறக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் சக­ல­ரதும் நிலைப்­பா­டாகும் உள்­ளது. 
அவர் பத­வியை துறக்­கா­விட்டால் இப்­போது நாம் கொண்­டுள்ள நிலைப்­பாட்­டினை  இறு­தி­வரை கொண்­டு­செல்வோம். இரண்டாம் திகதி நாம் வெளிப்­ப­டுத்தும் இறுதி தீர்­மா­னமும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வா­கவே இருக்கும். நாம் தேசிய அர­சாங்­கத்தை காப்­பாற்ற வேண்டும் என நினைக்­கின்றோம். அதேபோல் மக்களின் நிலைப்பாட்டினையும் கவனத்தில் கொண்டே தீர்மானம் எடுக்கின்றோம். பிரதமரை நீக்கிவிட்டு எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகாலம் நாட்டில் ஜனநாயக ரீதியில் பயணங்களை  முன்னெடுக்க முடியும். மிகச் சரியான ஆட்சியினை நடைமுறைப்படுத்த முடியும். ஆகவே நல்லாட்சி தொடர வேண்டும் என்றால் அதில் இறுதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு இருக்க வேண்டும் என்றால் பிரதமரை உடனடியாக நீக்க வேண்டும். 
ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியாது. ஆகவே இப்போது நாம் கொடுத்துள்ள கால அவகாசத்தில் பிரதமரே  பதவியை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நான்காம் திகதி இரவு 9 மணியுடன் நல்லாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஆகவே . நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற்றால் நல்லாட்சி முடிவுக்கு வரும் என்பது உறுதி எனக் குறிப்பிட்டார். 
பிரதமர் பதவி விலக வேண்டும் இல்­லையேல் தேசிய அர­சாங்­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும்! பிரதமர் பதவி விலக வேண்டும் இல்­லையேல் தேசிய அர­சாங்­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும்! Reviewed by NEWS on March 31, 2018 Rating: 5