மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பைஸர் முஸ்தபா நியமனம்!

NEWS
0 minute read
0


பைஷல் இஸ்மாயில், றியாஸ் இஸ்மாயில்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் விளையாட்டுத் துறை அமைச்சராக சிரேஷ்ட சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் (12.04.2018) நியமனம் செய்யப்பட்டார்.

முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த  தயாசிறி ஜயசேகர (11.04.2018) தனது அமைச்சுப்பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை சிறந்த முறையில் செயற்படுத்தி வருவதன் காரணமாக ஜனாதிபதியினால் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சையும்
இன்று புறம்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு ஜனாதிபதியினால் இன்று இரு அமைச்சுப் பதவிகள் வழங்கியிருப்பதானது இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரையும் கௌரவப்படுத்தியுள்ளதாக புத்துஜீவிகள் இதன்போது தெரிவிப்பதுடன் ஜனாதிபதிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி
தெரிவித்துள்ளனர். 
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)