கிண்ணியா; விளையாட்டு மைதானத்தை அசுத்தப்படுத்தும் கட்டாக்காலி மாடுகள்!

FB_IMG_1522046235208FB_IMG_1522046244402


கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட நகர சபையின் அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானம் கட்டாக்காலி மாடுகளினால் இரவு நேரங்களில் அசுத்தமாக்கப்படுவதாக விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் அவ் மைதானத்தினுள் கட்டாக்காலி மாடுகள் மலம் கழித்து விட்டு செல்வதனால் தாங்களின் விளையாட்டு நிலைமை பாதிக்கப்படுவதாகவூம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இது தவிர இரவு நேரங்களில் கிண்ணியா பிரதான வீதி வழியாக கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நடுவீதி வழியாக செல்வதனாலும் போக்குவரத்துக்கு இடைஞ்ஞலாக இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் எவ் வித நடவடிக்கைகளும் இற்றை வரைக்கும் மேற் கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதனால் வாகன விபத்துக்கள் மாட்டுடன் மோதி பல சம்பவங்கள் இடம் பெறுகின்றன எனவே கட்டாக் காலி மாடுகளை உடன் கட்டுப் படுத்த கிண்ணியா நகர சபை இவ் விடயத்தில் அசமந்தப் போக்குடன் செயற்படாமல் நடவடிக்கைகளை துரிதமாக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்கள்.

ஹஸபர் ஏ ஹலீம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...