முஹம்மட் இப்திகார்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் மசூர் சின்னலெவ்வையின் புதல்வர் றியா மசூர் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு செல்லவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதே சபையில் போட்டியிற்று வெற்றிபெற்றார், ஆனால் அவர் எதிர்பார்த்தவாறு தவிசாளர் பதவி கிடைக்கவில்லை, இந்த மன உளைச்சலால் முதலாவது அமர்வில் அவர் பேசியதை காணக்கூடியதாய் இருந்தது.
இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கட்சி முக்கியஸ்தர்களுக்கு பாடம் கற்பிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் றியா, இந்த தகவல்களை அறிந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை முக்கியஸ்தர்கள் சிலர் றியாவிடம் பேசி கட்சியில் முக்கிய இடம் தருவாதாக உறுதியளித்துள்ளனர், இதனடிப்படையில் றிசாத் அணியோடு றியா செல்ல முடிவெடுத்துள்ளதாக அறிய வருகிறது.
றியா மசூர் மயில் கட்சிக்கு செல்ல முஸ்தீபு; மும்முனை பேச்சு முடிவில் தகவல்!
Reviewed by NEWS
on
April 16, 2018
Rating:
