கண்டி வன்முறை - திலும் அமுனுகம பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில்!


Image result for திலும் அமுனுகம
கடந்த மார்ச் மாதம் கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 10ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிற்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 10ம் திகதி பாராளுமன்ற அமர்வு இருப்பதன் காரணமாக குறித்த வாக்குமூலத்திற்கான தினத்தினை மாற்றி தருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும் வேறொரு தினம் வழங்குவது தொடர்பில் இதுவரை தனக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...