இலங்கை முஸ்லிம்கள் பற்றி சி்ங்கள ஊடகங்கள் மூலம் பேசுவதே காலத்தின் தேவைஏ.எல்.எம்.சத்தார்
1800 களின் இறு­தி­யிலும் 1900 களின் முதல் தசாப்­தத்­திலும் அந­கா­ரிக தர்­ம­பால சிங்­கள மக்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்­குக்­கெ­தி­ராக விதைத்த வெறுப்பு பிர­சா­ரத்தின் விளை­வா­கவே 1915 ஆம் ஆண்டு முஸ்­லிம்கள் மீதான இனக்­க­ல­வரம் மூண்­டது.
அதுவே இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­க­ளுக்­குக்­கெ­தி­ராக சிங்­க­ள­வர்­களால் தொடுக்­கப்­பட்ட முத­லா­வது இன நாச­கார நட­வ­டிக்­கை­யாக பதி­வா­கி­யுள்­ளது.
இக்­க­ல­வரம் கண்டி மாவட்­டத்தில் கம்­ப­ளையில் ஆரம்­பிக்­கப்­பட்டு அது நாடு முழு­வ­து­மாக வேக­மாகப் பர­வி­யது. இதனால் முஸ்­லிம்­களின் உயிர் உடை­மை­க­ளுக்கு பாரிய நாசம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. வர­லாற்றுப் பதி­வு­க­ளின்­படி 4075 முஸ்லிம் கடைகள் உடைத்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன. 350 முஸ்லிம் கடைகள் எரித்து நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன. 25 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 189 பேர் காயத்­திற்­குள்­ளாக்­கப்­பட்­டனர். இவ்­வாறு அந்தப் பதி­வுகள் கூறு­கின்­றன.
அன்­றைய கால­கட்­டத்தில் இலங்கை ஆங்­கி­லே­யரின் ஆட்­சியின் கீழ் இருந்­தது. இக்­க­ல­வரம் ஆங்­கி­லே­ய­ருக்கு புது அனு­ப­வ­மா­கவும் அமைந்­தது. இதனால் இதனை உட­ன­டி­யாக அடக்­கவும், பர­வாது தடுக்­கவும் முடி­யாது போனது. ஆனாலும் இன்று நடப்­பது போன்­றல்­லாமல் காவல்­து­றை­யினர் நடு­நி­லையில் நின்று கல­கத்தை அடக்க முயன்­றனர். வன்செயல்கள் நாடு முழு­வ­திலும் வியா­பித்­துள்­ளதால் பாது­காப்­புக்குப் போதிய துருப்­பினர் இல்­லாத நிலையில் ஆங்­கி­லே­யரின் ஆதிக்­கத்தில் இந்­தி­யாவின் பஞ்சாப் மாநி­லத்தில் அமர்த்­தப்­பட்­டி­ருந்த இரா­ணுவம் இங்கு உட­ன­டி­யாக வர­வ­ழைக்­கப்­பட்­டது. இவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் கலகம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டது. இந்­தி­யா­வி­லி­ருந்து தரு­விக்­கப்­பட்ட இரா­ணு­வத்தில் பெரும்­பா­லானோர் முஸ்லிம் வீரர்­க­ளாக இருந்­தனர். இதன் கார­ண­மாக இங்கு பாதிக்­கப்­பட்டு குற்­று­யி­ராக இருந்த முஸ்­லிம்­க­ளுக்கு தகுந்த பாது­காப்புக் கிடைக்­கப்­பெற்­றது. அத்­துடன் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக வன்­செ­யலில் ஈடு­பட்டோர் பார­பட்­சமோ தகுதி தரா­த­ரமோ பாராது கைது செய்­யப்­பட்டு தண்­டிக்­கப்­பட்­டனர்.
கல­கத்தை தலை­மை­தாங்கி நடத்­தி­யவர் இனம் காணப்­பட்டார். கொழும்பு காலி முகத்­தி­டலில் வைத்து பகி­ரங்­க­மாக துப்­பாக்­கியால் சுட்டு அவ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. இவர் சிங்­கள மக்­களின் முக்­கிய அர­சியல் புள்­ளி­யொ­ரு­வரின் புதல்வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இதன் பின்னர் இனப்­பூசல் என்ற வகையில் 1956 ஆம் ஆண்டு மொழிப் பிரச்­சி­னையால் தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ராக சிங்­கள மக்­களால் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு இனப்­பி­ரச்­சி­னையின் எதி­ரொ­லி­யாக தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ராக பாரி­ய­ள­வி­லான கல­வரம் வெடித்­தது. இவற்றைத் தவிர ஆங்­காங்கே அவ்­வப்­போது சிறு சிறு கல­வ­ரங்­களும் மூண்­டுள்­ளன. இக்­க­ல­வ­ரங்­களின் போதெல்லாம் பாது­காப்பு துறையும் அரசும் சிங்­களப் பேரினப் பக்கம் சார்ந்தே நின்­றமை ஈண்டு குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
1915 கல­வரம் முதல் இன்று வரையும் முஸ்­லிம்கள் மீதான சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் பாய்ச்சல் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் பல­வா­றா­கவும் நடந்­தே­றி­யுள்­ளன. இச்­சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் அவ்­வப்­போது நாட்டில் ஆட்­சி­யி­லி­ருந்த அரசும் காவல் துறை­யி­னரும் சிங்­கள மக்­க­ளுக்குத் துணை­போகும் வகையில் நடந்து கொண்­ட­மையால் முஸ்­லிம்கள் பாரிய பாதிப்­புக்­களைச் சந்­தித்­துள்­ளனர். முறை­யான நீதி நிலை நாட்­டப்­ப­டு­வ­திலும் முஸ்­லிம்கள் பின்­தள்­ளப்­பட்டே வந்­துள்­ளனர். நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­திலும் பார­பட்­சமும் கண்­து­டைப்­புமே நிகழ்ந்­துள்­ளன.
எவ்­வ­ளவோ உதா­ர­ணங்­களை முன்­வைக்க முடி­யு­மான போதிலும் அண்­மையில் இடம்­பெற்ற குரு­நாகல் பள்­ளி­வா­ச­லுக்கு கைக்­குண்டு வீசி தாக்­கப்­பட்ட, எரிக்­கப்­பட்ட மற்றும் ஹார்கோர்ட் மருந்­தகம் உள்­ளிட்ட கடை­க­ளுக்கு பெற்றோல் குண்டு எறி­யப்­பட்ட சீ.சீ.ரீ.வீ. காணொ­ளிகள் இருந்தும் கைது செய்­யப்­பட்டோர் விட­யத்தில் நிலவும் அச­மந்தப் போக்கைக் குறிப்­பி­டலாம். இதே போன்று ஞான­சார தேரர் விட­யத்தில் அவர் பார­தூ­ர­மான குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட வேண்­டிய நிலையில் அவ­ருக்கு எதி­ராக பொலிஸார் ஏற்­க­னவே தயா­ரித்த பீ பத்­திரம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்-டு அவ­ரது குற்­றச்­செயல் நலி­ன­மாக்­கப்­பட்­டமை பரம இர­க­சி­ய­மல்ல. இதுவும் இங்கு முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்புத் துறை­யி­ன­ராலே அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதென்பதைக் குறிப்­பி­டலாம்.
 அண்­மையில் கண்டி திக­னயில் இடம்­பெற்ற அடா­வடித் தனங்­களின் போதும் காவல் துறை­யினர் நடத்­திய அட்­டூ­ழி­யங்கள் குறித்தும் நாம் அறிவோம். கல­வ­ரத்தின் போதும் காவல் துறையின் அநீதி, அதில் காயப்­பட்டு வைத்­தி­ய­சா­லையை நாடி­னாலும் அங்கும் ஒரு சில பேரின வைத்­தியர், தாதி­யர்­களால் நச்­ச­ரிப்பு– பார­பட்சம் என்று அவ­லங்­க­ளைத்தான் சிறு­பான்மைச் சமூ­கங்கள் முகம் கொடுத்து வரு­கின்­றன.
ஆனால் கண்டி கல­வ­ரத்தின் பின்­ன­ராக சட்ட நட­வ­டிக்­கைகள் ஓர­ளவு திருப்­தியைத் தரு­கின்­றன. ஆனால் அவற்றின் தீர்ப்பு எப்­படி அமை­யுமோ என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.
அன்று அந­கா­ரிக தர்­ம­பா­ல­வினால் அநா­க­ரி­க­மாக நட்­டி­ வ­ளர்க்­கப்­பட்ட நச்சு மரத்­தி­லி­ருந்து விஷ விளைச்­சல்கள் அவ்­வப்­போது தோன்றி சிங்­கள மக்­களை உசுப்­பேற்றி வரு­கின்­றன. அவை சிங்­கள– முஸ்லிம் கல­வ­ர­மாக முடுக்­கி­வி­டப்­ப­டு­கின்­றன. அதனை முடக்க வேண்­டிய பாது­காப்புத் துறை­யி­னரும் சிங்­க­ளவர் என்­பதால் சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­டு­வதில் பார­பட்­சமே காட்­டப்­பட்டு வரு­கி­றது.
தர்­ம­பா­ல­விற்குப் பின்னர் 1990 களில் இயங்­கிய வீர­வி­தான என்ற அமைப்பு பிர­சாரம், துண்டுப் பிர­சு­ரங்கள் மூலம் முஸ்­லிம்கள் மீதான விஷமப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தது.
 தொடர்ந்து கங்­கொ­ட­வில சோம தேரர் தன் சிந்­தனை, பேச்சு வன்­மையால் முஸ்­லிம்­களை வெறுப்­பூட்டும் விஷக் கருத்­துக்­களைக் கக்­கினார். இவரின் இன­வாத சிந்­த­னைக்கு கணி­ச­மான சிங்­கள மக்கள் பலி­யா­கவே செய்­தனர். குறு­கிய காலத்­திற்குள் அவரும் மர­ணத்தைத் தழு­வினார். ஆனால் அவரால் விதைக்­கப்பட்ட விஷ­மத்­தனம் விளைச்சல் தரத் தவ­ற­வில்லை. இந்த வரி­சையில் சிஹல உரு­மய உரு­வாகி, வெறுப்புப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தது. பின்னர் ஹெல உரு­ம­ய­வாக பெயர் மாறி­ய­போ­திலும் அதே செயற்­பாட்­டு­டனே முஸ்லிம் விரோ­தப்­போக்­குடன் இயங்­கி­யது. இந்த சந்­தர்ப்­பத்தில் தான் ஞான­சா­ர­தேரர் தலை­யெ­டுத்து முஸ்லிம் விரோதப் பிர­சா­ரத்தைக் கார­சா­ர­மான முறையில் கையி­லெ­டுத்தார். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களின் போதெல்லாம், பின்­ன­ணியில் அர­சி­யலும் உறு­துணை புரி­யவே செய்­தது. அர­சியல் ஆதா­யமும் இன­வா­தமும் இரண்­டறக் கலந்து இன­வாத சக்­தி­க­ளுக்கு துணை­போ­கவே செய்­தன.
ஞானசாரவின் பொதுபலசேனா, சிஹலராவய, சிங்ஹலே அபி, ராவண பலய, மஹசொன் பலகாய உள்ளிட்ட பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் இங்கு எழுந்துவரும் முஸ்லிம் எழுச்சியை முடக்க, வெறுப்புப் பிரசாரத்திலும் தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இவ்­வாறு அவ்­வப்­போது தோன்­றிய இன­வாத அமைப்­புக்கள் பௌத்த சிங்­கள மக்­களை முஸ்­லிம்கள் மீது வெறுப்­பூட்டும் விதத்­தி­லேயே பௌத்த விகா­ரைகள், பௌத்த கிரா­மங்­களில் விஷ­மப்­பி­ர­சார செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தே வந்­துள்­ளன. துண்டுப் பிர­சு­ரங்­களும் விநி­யோ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளன. இவை முஸ்­லிம்­களின் கரங்­க­ளுக்கு எட்டும் போது முஸ்­லிம்­க­ளி­டையே பர­ப­ரப்பு ஏற்­ப­டு­வ­தோடு சோடா போத்தல் கேஸ் போல் அது தணிந்தும் விடு­கின்­றது. இத்­த­கைய வெறுப்புப் பிர­சார நட­வ­டிக்­கை­களால் இன மோதல்கள் தூண்­டப்­படும் என்ற குற்­றச்­சாட்டு இருக்கும் நிலை­யிலும் பாது­காப்பு தரப்பும் அரசும் இது விட­யத்தில் அசட்டை காட்­டியே வரு­கின்­றன. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­வி­களால் இவற்­றுக்குப் பல­மான முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருக்­கு­மானால் இவற்றுக்கெதிராக அரசும் பாது­காப்புத் தரப்பும் செயலில் இறங்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கலாம். அப்­போது அசம்­பா­வி­தங்கள் தலை தூக்­காது தடுத்­து­மி­ருக்­கலாம். இவை எதுவும் கையா­லா­காத நிலை­யிலே இன வெறுப்­பு­ணர்வின் கையே மேலோங்கி முஸ்­லிம்­க­ளுக்கு உயிர், பொரு­ளா­தார அழி­வு­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.
இன­வா­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஊடக பிர­சாரம், உரைகள், துண்டுப் பிர­சு­ரங்கள் ஆகிய அத்­தனை விஷமப் பிர­சார உத்­தி­களும் சிங்­கள –பௌத்த மக்கள் அனை­வ­ராலும் ஏற்­கப்­ப­ட­வில்லை. ஏற்­கப்­பட்ட அற்ப தொகை­யி­னரின் அட்­ட­கா­சத்­தா­லேதான் அவ்­வப்­போது பள்­ளி­வா­சல்கள் தாக்­குதல், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் உடைத்து தீக்­கி­ரை­யாக்கல், முஸ்லிம் குடி­யி­ருப்­புகள் எரித்து சூறை­யாடல் போன்ற அடா­வ­டித்­த­னங்கள் அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றன.
வெறுப்­பூட்டும் துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் வரி­சையில், ‘கெமுனு சந்­த­தி­களின் பிள்­ளைகள்’ என்ற பெயரில், ஏ–4 அளவில் 11 பக்­கங்கள் கொண்ட துண்­டுப்­பி­ர­சு­ர­மொன்று விகா­ரை­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. வெலி­கம பகு­தியில் விநி­யோ­கிக்­கப்­பட்ட மேற்­படி பிர­சு­ரத்தின் பிர­தி­யொன்று அங்­குள்ள நண்பர் ஒருவர் மூலம் எமக்கும் கிடைக்கப் பெற்­றது.
அதன் முன் பக்­கத்தில் கௌரவத்­தி­ற்­கு­ரிய சாது­வுக்கு என்று விளிக்­கப்­பட்டு, கடந்த காலங்­களில் தாங்கள் காட்­டிய அர்ப்­ப­ணிப்­புக்கள் மேலா­ன­தாகும். இப்­போதும் அவ்­வாறே அமைய வேண்டும். இப்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பயங்­க­ர­மான சூழ்­நி­லை­யி­லி­ருந்து அப்­பாவி சிங்­கள பௌத்­தர்­களைப் பாது­காக்க சங்­கைக்­கு­ரிய பிக்­கு­க­ளால்தான் முடியும். அதனால் இத்­துடன் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தைப் படித்து பொருத்­த­மான முறையில் உங்கள் போத­னை­க­ளின்­போது எங்கள் மக்­க­ளுக்குத் தெளி­வூட்­டுங்கள். எமது சமய பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கும் இயன்றவரையில் அறி­வூட்­டுங்கள் என்று புனித பூர்­வ­மாகக் கேட்டுக் கொள்­கிறோம் என்று பிர­சு­ரத்தின் முன்­னு­ரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் உள்­ள­டக்­கத்தை சுருக்­க­மாகத் தரு­கிறேன்.
முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் தன­வந்­தர்­களின் உத­வி­களைப் பெற்று முஸ்­லிம்கள் பள்­ளி­வா­சல்­களின் ஊடா­கவே இந்­நாட்டில் சிங்­கள பௌத்­தர்­களை விடவும் மேலோங்க முயற்­சிக்­கி­றார்கள்.
க.பொ.த. உயர்­தரப் பரீட்சை வினாத்­தாள்­களை முன்­கூட்­டியே முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு வெளி­யாக்கி அவர்­களை வைத்­தி­யத்­துறைப் படிப்­புக்கு நுழை­யச்­செய்து வைத்­தி­யர்­க­ளாக்கி விடு­கி­றார்கள். இவ்­வைத்­தி­யர்கள் சிங்­களப் பெண்­களைக் குடும்­பக்­கட்­டுப்­பாடு செய்து சிங்­கள இனம் பெரு­கு­வதைத் தடுத்து விடு­கி­றார்கள். முஸ்லிம் பெண்கள் 8– 10 குழந்­தைகள் பெற பல­வாறு உத­வு­கி­றார்கள்.
முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களில் அதி­க­ளவில் சிங்­களப் பெண்­களை உள்­வாங்கி முஸ்லிம் வாலி­பர்­க­ளுடன் தொடர்­பு­களை உரு­வாக்கி எமது பெண்­களை மதம் மாற்­றச்­செய்து மண­மு­டித்து வைக்­கி­றார்கள். 2014 ஆம் ஆண்டில் மாத்­திரம் இவ்­வாறு 3000 சிங்­களப் பெண்கள் மத­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.
சிங்­களப் பெண்­களை முஸ்லிம் நாடு­க­ளுக்கு வேலைக்கு அனுப்பி இங்­குள்ள அவர்­க­ளது கண­வன்மார் மது­போ­தை­யிலும் பிள்­ளைகள் சீர­ழிந்து சீர்­கெ­டவும் வழி செய்­கி­றார்கள். அரபு நாட்­டிலும் அடி­மை­க­ளாகி சித்­தி­ர­வ­தை­யோடு சம்­ப­ளமும் இன்றி நாடு திரும்­பு­கின்­றனர். இவ்­வாறு சிங்­களக் குடும்­பங்­களை சிதைத்து வரு­கின்­றனர்.
பௌத்த விகா­ரை­க­ளுக்கு அரு­கே­யுள்ள காணி­களை வாங்கி அங்­கெல்லாம் முஸ்லிம் குடி­யேற்­றங்­களை உண்டு பண்­ணு­கி­றார்கள். பின்னர் பௌத்த விகா­ரை­யையும் குட்­டிச்­சு­வ­ராக்கி அப்­ப­கு­தியை ஆக்­கி­ர­மித்துக் கொள்­கி­றார்கள். கண்டி தலதா மாளி­கையைச் சூழ இப்­பேது 16 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. பொத்­துவில், தீக­வாபி, சோமா­வதி புனித பூமி­களில் எல்லாம் இதே ஆக்கிரமிப்பு நிலையைக் காண­மு­டி­கி­றது.
முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பத­விக்கு வரும் அர­சுடன் இணைந்து பள்­ளி­வாசல் ஊடாக முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் அபி­வி­ருத்திப் பணி­களைச் செய்து கொள்­கி­றார்கள்.
முஸ்­லிம்கள் வியா­பாரக் கடைகள் நடத்­தவும், பள்­ளி­வா­சல்கள் துணை­பு­ரி­கின்­றன. இதனால் சிங்­கள வர்த்­த­கர்கள் நஷ்­ட­ம­டையச் செய்து அக்­க­டை­க­ளையும் முஸ்­லிம்கள் வாங்கிக் கொள்­கி­றார்கள். 99 வீத­மான சிங்­கள பௌத்­தர்கள் முஸ்லிம் கடை­களில் தான் கொள்­முதல் செய்­கி­றார்கள். இதன்­மூலம் பெரு­வா­ரி­யான சிங்­கள பௌத்­தர்­க­ளது பணம் முஸ்­லிம்­களின் பள்­ளி­களைச் சென்­ற­டை­கின்­றன.
இப்­படி சிங்­கள தேசத்தை முஸ்லிம் ராஜ்­ஜி­ய­மாக்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
சிங்­கள இனம் 2 x 2 x 2 x 2= என்று நான்கு பரம்­ப­ரையில் 16 ஆகும். போது முஸ்­லிம்­களோ 6 x  6 x 6 x 6 என்று 1296 ஆகி பன்­ம­டங்­காகப் பெரு­கு­வ­தாகப் புள்­ளி­வி­பரம் ஒன்­றையும் அப்­பி­ர­சு­ரத்தில் காட்­டி­யுள்­ளனர். இந்த வகை­யி­லேதான் பல முஸ்லிம் நாடுகள் உரு­வா­கி­யுள்­னள. இன்னும் 30 ஆண்­டு­களில் பிரான்ஸ், ஜேர்மன் முஸ்லிம் நாடு­க­ளா­கி­விடும். 2025 இல் ஐரோப்­பாவில் மூன்றில் ஒரு மடங்கு முஸ்­லிம்­க­ளா­கி­வி­டுவர். இன்னும் பத்­தாண்­டு­களில் ரஷ்ய இரா­ணு­வத்தில் 14 வீதம் முஸ்­லிம்­க­ளா­கி­வி­டுவர். இவ்­வாறு கிறிஸ்­தவ ராஜ்­ஜி­யங்­களின் தலை­வி­தியும் மாறி வரு­கி­றது. சிங்­கள மாண­வர்­களை சிறு வய­தி­லி­ருந்தே போதைக்கு அடி­மை­யாக்கும் வேலையும் முஸ்­லிம்­களால் நடத்­தப்­பட்டு வரு­கி­றது.
முஸ்­லிம்­களால் இழைக்­கப்­படும் மிகவும் சொற்ப விட­யங்­களே இத்­துடன் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இன்னும் ஏரா­ள­மான விட­யங்கள் இருக்­கின்­றன. எனவே நாம் தொடர்ந்தும் ஏமா­றக்­கூ­டாது. விழிப்­ப­டைய வேண்டும் என்று கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் ஷிஆ கோட்­பாட்­டி­லுள்ள ‘அல் தக்­கியா’ தொடர்­பான ஒரு நூலி­லுள்ள பல விட­யங்­களை மேற்­கோள்­காட்டி இஸ்லாம் மட்ட ரக­மாக விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இஸ்லாம் குறித்து எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.
அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி­பெ­யர்ப்பை வாசித்­து­விட்டு அதில் பல அத்­தி­யா­யங்­களில் இருந்தும் நுனிப்புல் மேய்ந்து 25 வச­னங்­களை இப்­பி­ர­சு­ரத்தில் இணைப்­பொன்றில் எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது. அவ்­வ­ச­னங்கள் அரு­ளப்­பட்ட சந்­தர்ப்ப சூழ்­நி­லைகள் தெரி­யாது. சிங்­கள மக்­க­ளுக்கு இஸ்லாம் மிகவும் பயங்கரவாதமுள்ள மதம் என்பதைக் காட்ட பகீரதப் பிரயத்தனம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேகங்களுக்கு ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் தகுந்த தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிங்கள மக்களைத் திசை திருப்ப இப்பிரசுரத்திலும் அவை எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
அப்பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள இரண்டொரு குர்ஆன் வசனங்களை இங்கு தருகிறேன்.
“ஆகவே சிறப்புற்ற மாதங்கள் சென்றுவிட்டால் இணை வைத்துக் கொண்டிருப்போரை அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்று விடுங்கள். இன்னும் அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள்” (அல்குர்ஆன்: 9:5)
“….நிகராகரிப்போரின் இதயங்களில் பயத்தை நான் போட்டுவிடுவேன். ஆகவே நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள். அவர்களின் (உடலிலுள்ள உறுப்புகளின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 8: 12)
“மேலும் (உங்களுடன் எதிர்த்துப் போரிட்ட அவர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள்….” (அல்குர்ஆன் 2: 191)
“அன்றியும் குழப்பம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்கே ஆகும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள்….” (அல்குர்ஆன் 2: 193)
இவ்வாறு அப்பிரசுரத்தின் மூலம் முஸ்லிம்களைத் தப்பாகப் புரியவைக்கும் வகையில் தலை, கால் புரியாமல் குர்ஆன் வசனங்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன.இந்த வகையில் பிரசுரங்கள், பிரசாரங்கள் தொடரவிடாது முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், அரச உயர் மட்டங்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். சிங்கள ஊடகங்கள் ஊடாக தகுந்த தெளிவுரைகள் ஊட்டப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய வன்முறைகளை ஓரளவுக்கேனும் அல்லது முற்றாகவும் தடுத்து நிறுத்தமுடியும்.
இலங்கை முஸ்லிம்கள் பற்றி சி்ங்கள ஊடகங்கள் மூலம் பேசுவதே காலத்தின் தேவை இலங்கை முஸ்லிம்கள் பற்றி சி்ங்கள ஊடகங்கள் மூலம் பேசுவதே காலத்தின் தேவை Reviewed by NEWS on June 11, 2018 Rating: 5