தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 31, 2018

இரத்தினபுரி பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை !!!


எம் எம் எம் நுஸ்ஸாக்


இன்று 31.07.2018 கலை முதல் தொடர்ந்தும் மழை பெய்த வண்ணம் காணப்படுகின்றது. நேற்று பின்னேரம் 6.00 மணி முதல் பெய்து வரும் மழை காரணமாக களுகங்கை நீர் மட்டம் உயர்வடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக இரத்தினபுரி மக்கள் பீதியில் உள்ளனர். அதிக மழை காரணமாக கடந்த 2017 ம் ஆண்டு 2018 ம் ஆண்டுகளில் நோன்பு காலங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதன் போது மக்கள் வெள்ளம் ஏற்படும் பிரதேசங்களை விட்டு வெளியேறினர். சிலர் இன்னும் பழைய வாழ்கை நிலைக்கு திரும்பாமல் பீதியில் உள்ளனர். தொடர்ந்து சீறற்ற காலநிலைமைகள் காணப்படுவதால் வெள்ள அன்ர்த்தம் ஏற்படும் என மக்கள் அச்சம் கொள்கின்றின்றனர். 

அரசினால் திட்டமிடப்பட்ட களுகங்கை செயற்த்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இத்திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவதன் மூலம் வெள்ள அனர்த்ததை குறைக்க முடியும். இரத்தினபுரியில் கொடிகமுவ, பண்டரவத்தை , படுகெதர் போன்ற இடங்கள் வெள்ள அனர்த்ததால் மிகவும் பாதிக்கப்படுவது வழக்கம். இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் வருமைகோட்டின் கீழ் வாழும் மக்கள் உள்ளனர். அதேபோன்று பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகின்றது. இப்பிரதேச மக்கள் ஆரோக்கியமான மன திருப்தியோடு வாழும் ஒரு சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages