Jul 29, 2018

அதாஉல்லாஹ் அக்கரைப்பற்றை அழிக்கின்றார் - உதாரணங்கள் வேண்டாம்அஸ்மி அப்துல் கபூர்
மாநகர சபை, பிரதேச சபை என இரு அதிகார மையங்களை உருவாக்கி அபிவிருத்தியின் உச்சம் காண வைத்த அதாஉல்லாஹ்
பயங்கரவாததால் எரியூட்டப்பட்ட சந்தையை நவீனமாக கட்டி அழகு படுத்திய அதாஉல்லாஹ்
பஸ் நிலையத்தை உருவாக்கி முகப்பு வழங்கிய அதாஉல்லாஹ்
சுரண்டப்பட்ட எல்லையை மீள் நிர்ணயம் செய்து எம்மை திடப்படுத்திய அதாஉல்லாஹ்
உள்ளக வீதிகளையல்லாம் காபட் வீதிகளாக்கி மண்ணின் கெளரவம் காத்த அதாஉல்லாஹ்
தொழிற் நுட்ப கல்லூரி அமைத்து துறைசார் கற்கையின் தூர நோக்கறிந்த அதாஉல்லாஹ்
ஆதார வைத்திய சாலை அமைத்து சகல வசதிகளோடும், மத்திய அரசின் கீழ் இயங்க வைத்து சாதனை புரிந்த அதாஉல்லாஹ்
அரங்கம் அமைத்து, ஜிம் சென்றர் அமைத்து, இரு வேறு பூங்கா கள் அமைத்து, பாடசாலைகளில் பல மாடி கட்டிடங்கள் அமைத்து தேவையான வளங்கல்லெல்லாம் வழங்கி இறுதியில் நீச்சல் தடாகம் வரை அமைத்து கொடுத்த அதாஉல்லாஹ்
அரச நிறுவனங்களின் பிராந்திய காரியாலயங்கள் அமைத்து, அரச சேவையாளர்களை உருவாக்கி தனி மனித வாழ்விலும் தன்னிறைவு காண வழி சமைத்த அதாஉல்லாஹ்
இங்கு சொல்ல மறந்தவை இன்னும் ஏராளம்
பிரதேச செயலகத்தில் இடம் உள்ள போது ஏற்கனவே நூதன சாலைக்காக திட்டமிடப்பட்ட பல கோடி பெறுமதியான முக வெற்றிலையான இடத்தில் கொந்தராத்து கெமிசனுக்காக கட்டப்பட்ட கோழிக் கூட்டை தடுத்து அக்கரைப்பற்றை அதாஉல்லாஹ் அழித்தார்
பள்ளி வளவுக்குள் பதுர் மைதானத்தை அமைத்த போதும் அதற்க்கு தனது பெயரை சூட்டிய போதும் யாருடைய கோழியை அறுத்து யாருடைய பெயரில் கத்தம் ஓத ஆரம்பிக்க பள்ளியால் தடுத்தார்கள்...அதை அதாஉல்லாஹ் தடு்த்து அழிக்கின்றாராம்.
அக்கரைப்பற்று பிரதேச சபையில் கூட பல மில்லியனுக்கு மைதானம் அமைத்த அதாஉல்லாஹ்
சர்வதேச மைதானத்துக்காக தயார்படுத்தி அழகு பார்த்த இடத்தில் கொமிசனுக்கு கட்டி திருப்பி திருப்பி திருப்பி உடைக்க வைப்பதை தடுத்ததால் அழிக்கிறாராம்.
பிரதேச சபையில் இருந்த போது புது றோட்டிலும், மாகாணசபை சென்ற போது குடியிருப்பிலும் வளவு பிடித்து அடைத்த சரித்திரம் அதாஉல்லாஹ் க்கு உண்டு.
அக்கரைப்பற்று ஒரு தொகுதிக்குள் வருவதை அதாஉல்லாஹ் தடுக்காராம்....வந்தால் யாருக்கு அதிக லாபம்...ஏற்கும் படி பேசலாமே!!!
வட்டமடு மக்களை கோடன்டும், கச்சேரி என்றும், கொழும்பன்றும், ஹக்கீம் என்றும், றோட் என்றும் அலைய வைத்து அந்த மக்களை இறுதியாக எங்கே நிறுத்தி இருக்கிறார்கள்?
அதாஉல்லா என்ன செய்ய சென்னான், நீங்கள் என்ன செய்தீர்கள், உஹது போர் எனும் வரலாற்று சம்பவத்தின் தவறுகளை நினைவு கூறுங்கள்.
இந்த மண்ணை மடி கணணியிலே, படம் வரைந்தோ காட்ட தேயிலை செடியின் வாசம் நுகர்ந்தவனா அதாஉல்லாஹ்
இந்த புழுதியில் படுத்துறங்கி அதன் வாசத்த சுவாசித்த தலைவன் அவனாலேயே அதற்க்கு விடிவு காண்பீர்கள்.
இன்சா அல்லாஹ்
அரசியலுக்காக அல்ல , இந்த முஸ்லீம் சமுகத்தின் நிம்மதிகாக உண்மை உரைக்க போய் பதவியை இழந்தவனால் அந்த சமுகத்தை வாழ்விக்க முடியுமென நாம் நம்புகிறோம்.
இருந்தாலும் அதிகாரத்தை இழந்தவன், பதவி துறந்தவன், மக்களால் நிராகரிக்கப்பட்டவன்
இந்த ஆட்சியை உருவாக்கியவர்களை எதிர்த்து அதுவும் அக்கரைப்பற்றை அழிக்க நினைக்கிறார் என்பது நல்லாட்சி போன்ற ஒரு நகைச்சுவையே....
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post