‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

R.ஹஸான்‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, சேவா கம்மான கிராமத்திற்கு நீர் வழங்கும் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய 6000 கோடி ரூபாய் முதலீட்டில் ‘எழுச்சிபெறும் பொலன்றுவை’ செயற்திட்டத்தின் கீழ் 180 வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வின் ஒரு அங்கமாக சேவா கம்மான கிராமத்திற்கு நீர்  வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 
இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரிசன் மற்றும் ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்