அணுகன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிட ஆரம்பவைபவம்அஸீம் கிலாப்தீன் 
குளியாப்பிட்டிய கல்வி வலயத்திட்குட்பட்ட மடிகே அணுகன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா                       (2018-08-30) மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் உறுப்பினர்.  P.S. நந்தசிறி, பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான M.L. அபுதாஹிர், மற்றும் A.கலீலுர்ரஹ்மான் ஆகியோரும்,குளியாப்பிட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் W.M.J.சந்திரசிறி ,குளியாப்பிட்டிய தமிழ் மொழி மூலமான உதவிக் கல்விப்பணிப்பாளர்M.A.G.அஸ்ரப் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழா மிகச்சிறப்பாக நடந்தேற பாடசாலையின் பழைய மாணவர்களும்,அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் சகல ஏற்ப்பாடுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...