”பொலிஸ் மா அதிபருக்கு எதிராக எனது போராட்டம் தொடரும் ” டான் பிரசாத்

இந்த நாட்டில் ஒரு துரோகி போன்று செயற்படும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தனது போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் தொடரவுள்ளதாக டான் பிரசாத் தெரிவித்தார்.

மஹசோன் பலகாயவின் அமித் வீரசிங்கவின் மனைவியுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

அதேபோன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவையும் கைது செய்து அவர் தொடர்பில் உள்ள குற்றச்சாட்டுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் டான் பிரசாத் கேட்டுக் கொண்டார்.

டான் பிரசாத் என்பவர், ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை கல்கிஸ்ஸை வீட்டில் வைத்து அச்சுறுத்தியமை, கொழும்பில் கடந்த 2016. 11.03ஆம் திகதியன்று தவ்ஹித் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை தற்கொலை தாக்குதல் நடத்தி விட்டு, தன்னையும் தீ வைத்து எரித்துக் கொள்ளுவேன் என அறிவித்திருந்தமை போன்றவற்றுக்காக பொலிஸாரினால் பல தடவைகள் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...