"துரித கிராமிய வசந்தம்-2020"; திருகோணமலை முழுவதும் அபிவிருத்தி பணிகள்!

"துரித கிராமிய வசந்தம்-2020" எனும் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டம் முழுவதும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் செவ்வாய்கிழமை காலை மூதூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

"துரித கிராமிய வசந்தம்-2020" என்ற பெயரில் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு புதிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.

இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அமைச்சுக்கள், உள்நாட்டு வெளிநாட்டு அரச, அரச சார்பற்ற நிறுவனகளின் ஊடாக நிதிகளை பெற்று திருகோணமலை மாவட்டம் முழுவதும் அனைத்து துறைகளிலும் உட்கட்டமைப்பு ,பௌதீக, ஆளணி வசதிகள் மேம்படுத்தப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதுவரை இந்த திட்டத்துக்கு பல்வேறு அமைச்சுக்களில் இருந்து 466.5 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. 2020 வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்துக்கு பல அமைச்சுக்கள் தொடர்ச்சியாக நிதியை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன என தெரவித்தார்.

ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்