எந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது?

NEWS
1 minute read
“அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ்பெற்றார் வை எல் எஸ் ஹமீட் “ என்றொரு செய்தி உலாவருகிறது. அவர்களின் நிலைமை அப்படி.

கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் சுபைதீன் என்பவருக்கு நியமனப்பத்திரங்கள் கையொப்பமிட வழங்கிய அனுமதிக்கெதிராக நான் உயர்நீதிமன்றில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கே வாபஸ்வாங்கப்பட்டது.

இதற்கு காரணம் தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்து சுபைதீன் என்பவருக்கு தற்போது தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எந்த பொறுப்பும் கட்சியில் இல்லை. இந்த நிலைப்பாட்டை தேர்தல் ஆணைக்குழு தனது இணையத்தளத்திலும் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை முன்கொண்டுசெல்லவேண்டிய தேவை இல்லையென்பதாலும் எதிர்கால சில சட்ட அனுகூலங்களையும் கருத்திற்கொண்டு இந்த வழக்கு வாபஸ்பெறப்பட்டுள்ளது.

எனவே இது அ இ ம காங்கிரசிற்கெதிரான வழக்கு அல்ல. மாறாக தேர்தல் ஆணைக்குழுவின் முடிவுக்கெதிராக, தேர்தல் ஆணைக்குழுவிற்கெதிராகப் போடப்பட்ட வழக்காகும். அதனால்தான் அவ்வழக்கு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. கட்சிக்கெதிரான வழக்காக இருந்தால் அது மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கலாம்.

சில நடைமுறைத் தேவைகளுக்காக அவர்களில் ஒரு சிலரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டார்கள் என்றபோதும் பிரதானமாக அது தேர்தல் ஆணைக்குழுவிற்கெதிரான வழக்காகும்.

அதேநேரம் கட்சி தொடர்பாக என்னால் மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கோ, இடைக்காலத்தடை உத்தரவு சம்பந்தமான மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கோ வாபஸ்வாங்கப்படவில்லை.

எனவே, யாரும் குழப்பமடைய வேண்டாம்.


வை எல் எஸ் ஹமீட்
Tags