மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் மட்டக்களப்பு சர்வமத பேரவை தலைவர் ஆயர் ஜோஸப் பொன்னையா தலைமையில் 09.10.2018 அன்று மட்டக்களப்பு EHED Caritas மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் ஒன்றுகூடலில் முஸ்லிம்,இந்து,கிறித்தவ மதத் தலைவர்கள் காத்தான்குடி, ஏறாவூர் சம்மேளனத்தின் சமாதான குழு உறுப்பினர்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சர்வமத தலைவர்களின் இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கு இடையில்லான  நல்லிணக்கம், சக வாழ்வு தொடர்பிலும் புல்லுமலையில் நிறுவப்பட்டு வரும் தண்ணீர் தொழிற்சாலையினால் மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், இது விடயமாக ஜனாதிபதியின் அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு ஆலோசிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்கள் மத்தியிலும் சமூக நல்லிணக்கத்தையும் ,சகவாழ்வையும்  ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு சர்வமத பேரவை சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- எம்.பஹ்த் ஜுனைட்
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை ஒன்றுகூடல் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை ஒன்றுகூடல் Reviewed by NEWS on October 10, 2018 Rating: 5