அக்குறணை, ஹாரிஸ்பத்துவ தொகுதி உடஹிங்குல்வல குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் துனுவில குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றின் ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (07) ஆரம்பித்து வைத்தார். 

இந்த நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் உடஹிங்குல்வல, பியபத்கம, உடஹேன, பதிராதவந்த, லிலிவெலிவத்த, துனுவில வடக்கு, துனுவில கிழக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4500 பேர் பயனடையவுள்ளனர். 

இந்நிகழ்வில் தபால், தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களான உபைதுல்லா, மிஹ்ரார், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share The News

Post A Comment: