21 நாளில்; 840 மில்லியனை வானூர்திக்கு செலவு செய்த மகிந்த!

NEWS
0 minute read
கடந்த 21 நாட்களில் மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது பிரத்யேக உலங்கு வானூர்தி பயணங்களுக்காக 840 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.

நாடாளுமன்றுக்கும் மஹிந்த ராஜபக்ச ஹெலிகப்டரிலேயே வந்து சென்ற நிலையில் சட்டவிரோத அரசிலேயே உல்லாசம் அனுபவிப்பதாக மஹிந்த தரப்பு மீது பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் மஹிந்தவின் செயலாளர் பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிராக 123 பேரின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
To Top