அரசை அமைக்க திட்டமிட்டுவோரே! இரு பொலிஸார் கொலைக்கு காரணம்அரசாங்கத்தை அமைக்க சதி திட்டம் தீட்டுவோரின் சதி முயற்சியே மட்டகளப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்கான காரணமாகும். அந்த சதி முயற்சியின் பின்னால் இருப்பது யாரென இந்நேரம் கண்டு பிடித்திருப்பார்களென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த தினத்தன்றே வவுணத்தீவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனவே நாட்டில் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்தவே இவ்வாறான செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் உண்மையான குற்றவாளிகள் யாரென்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சதிகாரர்கள் யாரென்று வெளிப்படுத்த வேண்டும். இப்போது அரசாங்கமும் இல்லை .முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை பயமுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான நிலையை ஏற்படுத்தாமல் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...