பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்

பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்றில் புதிய பிரதமரை நியமிக்கக்கோரும் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து இது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.
இதன்பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது." எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம் Reviewed by Ceylon Muslim on December 03, 2018 Rating: 5