"முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்"

(ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கினார் - பா.உ., த. சித்தார்த்தன்.) 

ஆனால் முஸ்லீம் தலைவர்கள் எந்தவொரு எழுத்து மூல உடன்பாடுகளுமின்றி ஆதரவளித்துள்ளமை முஸ்லீம் சமூகத்திற்கு இவர்கள் செய்த துரோகமாகும் . கடந்த மூன்றை வருடங்களாக அமைச்சுப்பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் தலைவர்கள் சமூகத்திற்கு பெற்றுத் தந்த உரிமை அரசியல் பற்றி விளக்க முடியுமா ?

முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில் விக்ரமசிங்கே , ஆனால் கூட்டமைப்போ ரணிலிடமிருந்து அவர்களின் சமூகத்திற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வதில் சாமர்த்தியமிக்கவர்கள்.

இன்றும் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்திற்கு எந்தவொரு பலனையும் பெற்றுக் கொள்ளாமல் தங்களுடைய எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலை ஐதாகவுடன் இணைந்து கேட்பதன் மூலமாகத்தான் மீண்டும் நாடாளுமன்றம் வரலாம் என்று கணக்கு போட்டு கொண்டிருப்பதனால் தான் சமூகத்தின் உரிமை விடயத்தில் அசமந்தமாக இருப்பது போன்று தோன்றுகின்றது .

  • முஸ்லீம் சமூகத்துக்கு ரணில் செய்த எந்த நல்ல காரியத்திற்க்காக முஸ்லீம் தலைவர்கள் ரணிலுடன் நிற்கின்றனர் ?
  • கரையோர மாவட்டம் தந்தமைக்கு நன்றி செலுத்துகின்றாரா ?
  • மாயக்கல்லி சிலையை ஒரு வாரத்திற்குள் அகற்றியமைக்கா ?
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை அம்பாறைக்கு எடுத்துச் சென்றமைக்கா ?
  • காணிப்பிரச்சினைகளை தீர்த்து தந்தமைக்கா ?
  • சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை பெற்றுத் தந்தமைக்கா ?
  • ஒலுவில் மக்களின் பிரச்சினைக்கு சாதகமாக தீர்வு பெற்றுத் தந்தமைக்கா ?
  • பொத்துவில் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தமைக்கா ?
அல்லது ரணில் பாதுகாப்பு அமைச்சை கைப்பற்றியவுடன் அம்பாறை , திகன பிரச்சினைகளை உடனடியாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தமைக்கா ?

இன்னும் பல நல்ல விடயங்களை நம் சமூகத்திற்க்காக செய்த ரணிலுக்கு நன்றிக் கடன் தீர்ப்பதற்க்காகவா இன்னும் இவருக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் ?

இவன், மீரா அலி ரஜாய்
"முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்" "முஸ்லீம் தலைவர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் ரணில்" Reviewed by NEWS on December 13, 2018 Rating: 5