கொலை சதி விபரம் வெளியானது : ஜனாதிபதி, கோட்டா தொடர்பில் தகவல் இல்லை

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தொடர்பிலான கொலை சதி முயற்சியை வெளிப்படுத்திய நாமல் குமார முன்வைத்த குரல் ஒலி பதிவுகளில் ஜனாதிபதியையோ வேறு நபர்களையோ கொலை செய்வது தொடர்பில் எந்தவித தகவல்களும் காணப்படவில்லையென தெரியவந்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவரிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களே அந்த குரல் பதிவுகளில் காணப்படுவதாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாமல் குமாரவின் குரல் பல பதிவுகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரிசோதிக்கப்பட்டதாகவும் இதனடிப்படையிலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக நாமல் குமார நேற்று (23) அறிவித்திருந்தார்.

இருப்பினும், அவருக்கு எந்தவித எஸ்.டி.எப். பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்க வில்லையென தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...